திருமண வாழ்த்து
மணமகன் : பாண்டியராசன்
மணமகள் : நாகலெட்சுமி
மணநாள் : 25 02 2021
சேர்வை நல்லான் பாண்டியன்சீர்
சேர்வை நல்லாள் லட்சுமியை
கோர்வை பெற்ற குலம்போற்றக்
கொள்கின் றானால் திருமணத்தால்
மணக்கும் இந்த நல்லவர்கள்
வாழ்வில் இன்பம் பொங்குகவே
இணக்க மாக என்றென்றும்
ஏற்றம் பெற்று வாழியவே
பண்பின் விளக்கச் சுடராகப்
பலரும் போற்ற நலம்பெருகிக்
கண்போல் மக்கட் பேறுடனே
கனிந்து வாழி வாழியவே
அன்புள்ள