Thursday, September 9, 2021

சாரதிதாசன் பாடல்கள் Sarathidasan

கவிஞர் சாரதிதாசன் பயிற்சியால் பாடு பெற்ற கவியரசு. இறையாற்றலை எண்ணிப் பாடும் ஏந்தல். கூத்தனூர்க் கலைவாணி அருள் தரவேண்டும் என்று 100 வெண்பாகள் பாடியுள்ளார். 

வாழ்த்தி வரம்தருவாய் வற்றாத ஆனந்தத்(து) 
ஆழ்த்தி அருள் புரிவாய் அன்னைசிரம் - தாழ்த்தியுனைப் 
போற்றிஅருள் பாக்கள்  பொழியவே கூத்தனுர் 
வீற்றிருப் போய்!அருள்க வே. - இது ஒரு சுடர். 

இத் தொகுப்பில் ஸ்ரீ கலைமகள் திருப்பள்ளி எழுச்சி 10 விருத்தங்கள் கொண்ட ஒரு நூல். கலைமகளே பள்ளி எழுந்தருளாயே - என்று அவை முடிகின்றன. 

ஸ்ரீ சகலகலாவல்லி சரணாகதிப் பதிகம் மற்றொரு நூல். சகலகலா வல்லி  உனைச் சரண்டைந்தேனே என்று முடியும் 10 விருத்தங்கள் இதில் உள்ளன. 

கலைமகளே கடைக்கண்ணைக் காட்டியருள் வாயே - என முடியும் 30 விருத்தங்கள் கொண்ட நூல் கலைமகள் அருள்மாலை. 

- காலையும்
மாலையுமெப் போதும் மகிழ்வோடு மாண்பார் பா
மாலைகளைச் சூட்டி வணங்கஅருள் 
- என்பது போல் 382 கண்ணிகளில் கலைமகள் கலிவெண்பா வேண்டுகிறது. 

சாரதாம்பாள் பாமாலை 32 விருத்தம்
சரஸ்வதி துதி - 13 விருத்தம்
கலைமகள் கவிமாலை 30 விருத்தம் 
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கவிமாலை 100 விருத்தம் 
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் பஞ்சகம் 5 5 விருத்தம் 
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் பதிகம் 10 விருத்தம் 

இத்தனையும் கொண்டது இந்த நூலின் தொகுப்பு. 

பாடல்கள் மரபுக் கவிதைகள். 


மெய்யெழுத்து மந்திரம் a thought

நெடில் எழுத்து சொல்லாகிப் பொருள் தரும் பாங்கு தமிழில் வழக்கத்தில் இருந்து வருகிறது. 

து = உணவு உண்
நொ = துன்புறு

இப்படிக் குறில் பொருள் தரும் பாங்கைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. 

கனடா சொல்லாக்கியன் \  001 780 838 3993 \ dheena.subramanian@gmail.com மெய்யெழுத்துக்கும் பொருள் உண்டு என்கிறார். 

க் - சிறுநாக்கு தொண்டைத் துளையை அடைக்கும் இடம் 
ங் - தொண்டைச் சங்குப் பகுதி
ச் - தொண்டைக்குழி 
ஞ் - தொண்டைக் குழிக்குக் கீழ் உள்ள மேல் மார்புப் பகுதி
ட் - இடைமார்புப் பகுதி
ண் - மார்புப் பகுதி 
த் - கீழ்மார்புப் ப்பகுதி 
ந் - நெஞ்சகக் குழி 
ப் - வயிற்றுப் ப்பகுதி
ம் -  தொப்புள் பகுதி 
ய் - தொப்புளுக்குக் கீழ் உள்ள வயிற்றுப் பகுதி
ர் - அடிவயிற்றுப் பகுதி
ல்- குதகத்துக்கு மேல் உள்ள பகுதி
வ் - குதம்
ழ் - மூலாதாரம் (குண்டலினி)
ள் - பெண்குறி
ற் - ஆண்மகனின் விறை
ன் - ஆண்குறி

இப்படி ஒரு மந்திரம் (புதிர்).   


சூன் - 2019

செங்கைப் பொதுவன்
தீனதயாளன்